செயற்பாட்டை சுவிஸ் தூதரகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது என வெளியான செய்தியில் உண்மை இல்லை என தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 25ஆம் திகதி சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தபட்டு துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட அதிருத்தியால் விசா வழங்கும் சேவைகள் இடைநிறுத்தப்பட்டதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் சுவிஸ் தூதரகத்திடம் வினவியபோது, “விசா பெற்றுக்கொள்ளும் நடைமுறைகளை சுவிஸ் தூதரகம் நிறுத்தவில்லை. விசா விண்ணப்பத்தை ஏற்றுக்கொளும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதுடன் குறித்த செயல்முறை இடம்பெற்று வருகின்றது” என பதிவிட்டுள்ளது.
இலங்கைக்கான விசா வழங்கும் செயற்பாட்டை சுவிஸ் தூதரகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது என வெளியான செய்தியில் உண்மை இல்லை#lka #Srilanka https://t.co/qd9bysT0OS pic.twitter.com/DdahKMSrJM— vithushan Jeyachandran (@imjvithu) December 5, 2019