கனமழை காரணமாக 8959 குடும்பங்களை சேர்ந்த 28764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
மேலும் 6 வீடுகள் முழுமையாகவும் 137 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அப்புள்ளிவிபரம் மேலும் தெரிவிக்கின்றது.
கரைச்சி கண்டாவளை- பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த புள்ளிவிபரம் குறிப்பிடுகின்றது.
கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 4259 குடும்பங்களை சேர்ந்த 13754 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 4வீடுகள் முழுமையாகவும் 118 வீடுகள் பகுதியளவிலும் சேதமாகியுள்ளன.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 4045 குடும்பங்களை சேர்ந்த 13121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 2 வீடுகள் முழுமையாகவும் 17 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 319 குடும்பங்களை சேர்ந்த 917 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 336 குடும்பங்களை சேர்ந்த 972 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 2வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தள்ளன. பாதிக்கப்பட்டவர்களிற்கான உதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மாங்குளம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மழை பெய்துள்ளமையால் இரணைமடு குளத்திற்கு மேலும் நீர் வருகை தருகின்றது. இதன்காரணமாக இன்று காலை இரணைமடு குளத்தின் 8 வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.