
கொடுக்கவுள்ளதாக இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
வேலூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் 16 வயதினிலே திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
இந்த திரைப்படம் குறித்து தொடர்ந்து தெரிவித்த அவர், “16 வயதினிலே படத்துக்கு ஐந்தாயிரம் சம்பளம் கேட்டார் ரஜினி. அவ்வளவு தொகை முடியாது இது சிறிய பட்ஜெட் படம்தான் என்றேன்.
உடனே ரஜினி நான்காயிரம் ரூபாய் கேட்டார். இல்லை என்றேன். இறுதியில் அந்தப் படத்திற்காக ரஜினிக்கு 2500 ரூபாய் கொடுத்தேன். இன்னமும் அவருக்கு 500 ரூபாய் பாக்கி இருக்கிறது. இன்றும் ரஜினி என்னிடம் ‘அண்ணே அந்த 500’ என்று விளையாட்டாக கேட்பார்.
ரஜினியுடன் எனக்கு இரண்டு முறை கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சில முறை அவருடன் முரண்பாடு ஏற்பட்டது. அப்போது நான் ஒரு அறிக்கை வெளியிட்டேன். அப்போதும் ரஜினி என் மீது கோபப்படாமல் இருந்தார்.
இதுதான் அவரது எளிமை. எல்லாரும் ரஜினியாக பிறக்க முடியாது. கடவுள்களுக்கு உள்ளது போல் ரஜினிக்கும் ஒரு பவர் உள்ளது. அது தான் அனைவரையும் இழுக்கிறது” என தெரிவித்துள்ளார்.
