LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C



ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, November 2, 2019

‘மஹா புயல்’- வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு

கிழக்கு மத்திய அரபிக்கடலில்
நிலைகொண்டிருந்த’ மஹா புயல்’ தமிழகத்தை விட்டு விலகி லட்சத்தீவுகளை தாண்டி நகர்ந்து செல்வதால், தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி படிப்படியாக வலுப்பெற்று ‘மஹா புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இன்று அதிகாலை காலை 5.30 மணி நிலவரப்படி கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேற்கு வட மேற்கு திசையில் 390 கிலோ மீற்றர் தொலைவிலும், லட்சத்தீவு பகுதியில் அம்மினி தீவில் இருந்து 400 கிலோ மீற்றர் தொலைவிலும் வடக்கு வடமேற்கு திசையில் உள்ளது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அதிதீவிர புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இது தமிழகத்தை விட்டு விலகி செல்வதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதேவேளை வரும் 4 ஆம் திகதி வடக்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7