வளிமண்டலத்தில் காற்று மாசு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு நகரில் இன்று (புதன்கிழமை) காலை காற்றில் 150 புள்ளியாக தூசு துகள்களின் தரச்சுட்டி காணப்பட்டதாக அந்த நிறுவகத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் சரத் பிரேமசிறி குறிப்பிட்டார்.
காலை 6 மணி தொடக்கம் 10 மணி வரையான காலப்பகுதியில் இந்த நிலை காணப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த காலப்பகுதியில் வாகன போக்குவரத்து அதிகரித்தமையும் இதற்கு காரணம் என சரத் பிரேமசிறி தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தற்போது இந்த நிலை குறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.