அருகில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவம் தொடர்பாக, பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படாத நிலையில், இதுகுறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை உடனடியாக தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
நேற்று (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் வெஸ்ற் என்டில் உள்ள ரொப்சன் மற்றும் டென்மன் வீதிப் பகுதியில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.
உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்தார்.
இது நடப்பு ஆண்டில் வன்கூவரில் இடம்பெற்ற ஒன்பதாவது கத்திக் குத்து கொலைச் சம்பவம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.