இல்லை வெள்ளை வேனும் இல்லை எனவே மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாழ்வதற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டார்.
மன்னார் தாரபுரம் கிராமத்தில் இன்று (சனிக்கிழமை) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி சுதந்திரத்திற்காகவும், ஜனநாயகத்திற்காகவும் வாக்களித்தீர்கள். அச்சமில்லாமல் வீதியில் செல்லுகின்றீர்களா? வெள்ளை வேன் வருகின்றதா? இல்லை.
பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபயவின் வெள்ளை வேன் கலாச்சாரத்தை மீண்டும் ஊடுருவச் செய்வதற்கு அனுமதிக்க வேண்டாம். எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களியுங்கள்.
மேலும் புதிய அபிவிருத்தி திட்டங்களையும் நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம். 2015ஆம் ஆண்டிலிருந்து நாம் ஆரம்பித்த அபிவிருத்தி செயற்பாடுகளை முன்கொண்டு செல்ல உதவுங்கள்.
மன்னார்- பூநகரி ஊடாக யாழ்ப்பாணத்திற்கான தரை வழிப் பாதையை நவீனமயப்படுத்தவுள்ளோம், தலைமன்னார் துறையை விருத்தி செய்து பயணிகள், கால்நடைகளுடன் வாகனங்களையும் கப்பலின் ஊடாக கொண்டு வரும் திட்டங்களை மேற்கொள்வோம்.
மன்னார், வவுனியா – திருமலை நெடுஞ்சாலையை அபிவிருத்தி செய்வோம். மீன்பிடித்துறையில் நவீனத்துவங்களை உருவாக்கி, மீன் வளர்ப்பை அறிமுகப்படுத்தி, மீன் ஏற்றுமதியில் அதிகரிப்பை ஏற்படுத்துவோம்.
அதே போன்று கால்நடை வளர்ப்பிலும் கவனம் செலுத்துவோம். ஏற்கனவே மல்வத்து ஓயா நீர் வழங்கல் திட்டத்தை தொடக்கியுள்ளோம். நவீனமயப்படுத்தலின் ஊடாக இந்த பிரதேசங்களில் தனியார் துறையினருக்கும் ஊக்குவிப்பை வழங்குவோம்.
நாங்கள் பணத்தை செலவழிப்பது வாக்குகளை பெற்றுக்கொள்ளுவதற்கு அல்ல. பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கே. எனவே பணத்திற்காக ஏமாற வேண்டாம். எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்து ஜனாதிபதியாக்குங்கள்” என தெரிவித்தார்.