ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளுக்காக 243 இராணுவத்தினர் மாலி நாட்டிற்கு பயணிக்கவுள்ளனர்.
அதற்கமைய இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) 43 இராணுவத்தினர் மாலி நாட்டிற்கு செல்லவுள்ளனர். அதேவேளை, நாளைய தினம் 200 இராணுவத்தினர் மாலி நாட்டிற்கு பயணிக்கவுள்ளனர்.
இவர்களில் 20 இராணுவ உயரதிகாரிகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.





