பிரிவிற்குட்பட்ட பல்லவராயன் கட்டு பகுதியில் 104 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து வருகை தந்த விசேட போதை ஒழிப்பு பிரிவினரால் சோதனை மேற்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அப்பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதுடன், சந்தேகத்தின்பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பெற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மற்றும் கைதானவர்களை குறித்த குழுவினர் முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்