நாகூர் தர்கா, ஏர்வாடி பள்ளிவாசல் போன்ற இடங்களில் பிரார்த்தனை நடைபெற்றது. மதுரையில் மாற்றுத்திறனாளிகள் ஒன்று சேர்ந்து சுர்ஜித்துக்காக கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்தனர்.
மேலும், சமூக வலைத்தளங்களில் பலரும் சுர்ஜித்துக்காக பிரார்த்தனை செய்து பதிவிட்டு வருகின்றனர்.
“நாளை தீபாவளி என்றாலும் சுர்ஜித் பத்திரமாக மீட்கப்பட்டாலே அது உண்மையான தீபாவளி கொண்டாட்டம்” என பதிவிட்டு வருகின்றனர். நிச்சயம் சுர்ஜித் பத்திரமாக மீட்கப்படுவான் என நம்பிக்கையும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இதுவே கடைசி சம்பவமாக இருக்க வேண்டுமென்றும், இனி வரும் காலங்களில் ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுவதற்கு இந்த அரசும், பொதுமக்களும் அனுமதிக்கக் கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த நிலையில் தற்போது குழந்தை மேலும் இறங்கி 100 அடி ஆழத்திற்குச் சென்றுள்ளது.
இதனிடையே 26 மணி நேரங்கள் கடந்து, தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
சுர்ஜித்தை மீட்க அரசும், தனியார் அமைப்புகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. தற்போது ஆழ்துளைன் கிணற்றின் அருகில் குழி தோண்டி குழந்தையை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.