
இந்நிலையில், யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் விடுவிக்கப்பட்ட பகுதிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து யேமன் அரச படைகள் தாக்குதல் நடத்தியதில் 6 ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 10 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், அங்கு தொடர்ந்து தாக்குதல் நடைபெற்றுவருவதாக யேமனின் இராணுவ தளபதி ஜாஸ்ஸர் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு ஆசிய நாடான யேமனில், சன்னி பிரிவைச் சேர்ந்த ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
இதில் ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயற்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவளிக்கிறது.
சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து யேமனில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், யேமனில் நடந்துவரும் உள்நாட்டுப் போர் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். யேமன் அரசுடன் இணைந்து சவுதி நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
