LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, October 24, 2019

தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிக்க மத்திய அமைச்சரவை அனுமதி

தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில், “மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள மாவட்டங்களில் புதிய மருத்துவமனைகள் தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, இந்தியா முழுவதும் புதிதாக 75 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதில், தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  இதன்படி, தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

325 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படவுள்ளன. இதில், மத்திய அரசு சார்பில் 195 கோடி ரூபாயும், மாநில அரசு சார்பில் 130 கோடி ரூபாயும் அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7