பட்டியலில், கனடாவிற்கு ஒன்பதாவது இடம் கிடைத்துள்ளது.
உலக பொருளாதார மன்றத்தின் சமீபத்திய சுற்றுலா போட்டித்திறன் குறியீடு, ஒரு நாட்டின் வளர்ச்சி, போட்டித்திறனுக்கு பங்களிக்கும் சுற்றுலாத் துறையின் நிலையான வளர்ச்சிக்கு உதவும் காரணிகள், கொள்கைகளின் தொகுப்பை அளவிடுகிறது.
அதன்படி உலக பொருளாதார மன்றத்தின் சமீபத்திய பயண, சுற்றுலா போட்டித்திறன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையிலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 140 நாடுகளின் ஒப்பீட்டு பலத்தை தரவரிசைப்படுத்தி உள்ளது. இதில் ஸ்பெயின் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
பிரான்ஸ் இரண்டாவது இடத்தையும், ஜேர்மனி மூன்றாவது இடத்தையும், ஜப்பான் நான்காவது இடத்திலும், அமெரிக்கா ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
முன்பு வெளியான பட்டியலில் 5ஆவது இடத்தில் இருந்த இங்கிலாந்து 6ஆவது இடத்திலும், தொடர்ந்து அவுஸ்ரேலியா ஏழாவது இடத்திலும், இத்தாலி எட்டாவது இடத்திலும், கனடா ஒன்பதாவது இடத்திலும். சுவிஸ்லாந்து பத்தாவது இடத்திலும் உள்ளன.