சங்கத்தின் 21ஆவது ஆண்டு பொதுக்கூட்டமும் நிர்வாகத்தெரிவும் இடம்பெற்றது.
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரி.கே.இராஜேஸ்வரன் தலைமையில் வவுனியா றோயல் கார்டின் மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.
நிகழ்வில் விருந்தினர்களாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூறன், அரச அதிபர் எம்.கனீபா, நகரசபை உறுப்பினர்களான சந்திரகுலசிங்கம், சு.காண்டீபன், வர்த்தக சங்கத் தலைவர் ச.சுஜன், முச்சக்கரவண்டி சங்கத் தலைவர் ரவீந்திரன், சாரதிகள், பேருந்து உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது போட்டி இன்றி இருபத்தொராவது வருடமாகாவும் ரி.கே.இராஜேஸ்வரன் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக கே.சிவஞானமூர்த்தி, பொருளாளராக சஞ்சீவலிங்கம், உப தலைவராக எம்.விஜயரட்ணம், உப செயலாளராக காமாராஜா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதோடு நிர்வாக குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
நிர்வாகத் தெரிவினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் திடீர் மரண விசாரணை அதிகாரியான சிவநாதன் கிசோர் நடுநிலையாளராக இருந்து நடத்தி வைத்தார்.
இந்நிகழ்வின் போது விசேட தேவைக்குட்பட்டோர் மற்றும் சாரதியாக பணியாற்றி உயிரிழந்தவர்களின் பெற்றோர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு என மூன்று இலட்சம் பெறுமதியான நிதியுதவி பிரித்து வழங்கிவைக்கப்பட்டது