மாத்தறை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர காலமானார்.
தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை காலமாகியுள்ளார்.
அவர் தனது 73 ஆவது வயதில் காலமாகியதுடன் இவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மாத்தறை மாவட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில் இவருக்கு அடுத்தாக லக்ஷமன் யாபா அபேவர்தன இருப்பினும், அவர் தற்போது தேசிய பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றத்தில் உள்ளார்.
இதனால் அவருக்கு அடுத்து உள்ள மனோஜ் சிறிசேன நாடாளுமன்றத்திற்கு தெரிவாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.





