
நாட்டை மாற்ற முடியாது என ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
ஒரு தனி நபர் மூலமாக அன்றி ஒரு கூட்டுத் திட்டத்தின் மூலம் மட்டுமே நாட்டை மேம்படுத்த முடியும் என தெரிவித்த அவர், இதன் அடிப்படையிலேயே மக்களும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
குருநாகலில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தேர்தல் வரும்போது மட்டும் பலர் மந்திரவாதிகள் போலும் பேய்கள் போலவும் பல்வேறு வாக்குறுதிகளையும் பிரசாரங்களை முன்வைப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
இத்தகைய நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு புதிதல்ல என்றாலும், ஒரு தனி நபர் நாட்டை மாற்ற முடியாது. எனவே அனைத்து முயற்சிகளும் கூட்டாக இருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க மீண்டும் வலியுறுத்தினார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலில் இரு பெரும் தீமைகளில் ஒருவரை தெரிவு செய்ய வேண்டிய நிலை மக்களுக்கு இருந்தது. அவர்களின் புரிதலின் அடிப்படையில் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்தனர். இருப்பினும், 2019 ஜனாதிபதித் தேர்தல் வித்தியாசமாக இருக்கும் என்று அனுரகுமார திசநாயக்க தெரிவித்தார்.
