அல்பேர்ட்டா சட்டமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில், மாநில முதல்வருக்கான சம்பளம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பளம் ஆகியன குறைப்படவுள்ளது.
அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் குழு ஏகமனதாக நேற்று (வியாழக்கிழமை) மேற்கொண்ட இந்த முடிவின் அடிப்படையில், தேர்தலில் வெற்றிபெற்று தேர்வான சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் 5 சதவீதத்தினாலும், முதல்வர் ஜேசன் கெனியின் சம்பளம் மேலும் 5 வீதம் அதிகரித்து 10 சதவீத்தினாலும் குறைக்கப்படவுள்ளது.
கடந்த ஏப்ரல் மாத்தில் இடம்பெற்ற தேர்தலில் பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்ட ஐக்கிய பழமைவாதக் கட்சி, தேர்தலின் போது தம்மால் வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த ஏற்பாடுகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதல்வர் ஜேசன் கென்னி இப்போது ஆண்டுக்கு $186,000 சம்பளமாகவும் அதே நேரத்தில் அமைச்சரவை உறுப்பினர்கள் 181,000 டொலரும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் $121,000 பெறுகிறமை குறிப்பிடத்தக்கது.





