வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் ‘மாணவர் சமய நிழல்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இக்கட்டடம் நேற்று (சனிக்கிழமை) மாலை திறக்கப்பட்டது.
பௌத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய அறநெறிப் பாடசாலைகளை மேம்படுத்துவதற்காக மத்திய கலாசார நிதியத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் இந்த அறநெறிப் பாடசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.