LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, August 7, 2019

ஜனாதிபதி தலைமையில் இலங்கை – கம்போடிய முதல் வர்த்தக சந்திப்பு

கம்போடியவுக்கு அரசமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இலங்கை மற்றும் கம்போடிய வர்த்தகர்களின் முதல் சந்திப்பு இடம்பெற்றது.
Phnom Penh நகரில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பில் கம்போடிய பிரதமர் Samdech Akka Moha Sena Pakdei Techo HUN SEN கலந்துகொண்டார்.
இலங்கை மற்றும் கம்போடியாவிற்கு இடையில் வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு இதன்போது விரிவான கவனம் செலுத்தப்பட்டதுடன், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் என்ற வகையில் பொருளாதார வர்த்தக நடவடிக்கைகளில் இணைந்து செயற்படுவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், ஆடைகள், இரத்தினக்கல், கைத்தொழில் போன்ற பல்வேறு துறைகளில் இரண்டு நாடுகளுக்குமிடையில் இருந்துவரும் உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
கம்போடிய வர்த்தக குழுவின் தலைவர் Neak Okhna Kith Meng மற்றும் இலங்கை கொழும்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் சாரங்க விஜேரத்ன உள்ளிட்ட இரு நாடுகளினதும் வர்த்தகர்கள் பலரும் இந்த தல் சந்திப்பில் கலந்துகொண்டனர்.




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7