பகுதியில் இருந்து, 40 வயதான ஆணொருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
லேபியர் வீதிக்கு அருகிலுள்ள பாஸ்கல் வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் உள்ளே பொலிஸார் சென்றபோது, அவர்கள் போதைப்பொருட்களையும், சட்ட விரோத போதைப் பொருள் ஆய்வகமொன்றையும் கண்டுபிடித்தனர்.
எனினும் இதுகுறித்த மேலதிக தகவல் எதனையும் பொலிஸார் வெளியிடவில்லை. குறித்த பகுதியினை தற்போது அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
குறித்த ஆண், அளவுக்கு அதிகமாக போதைப் பொருளை எடுத்துக் கொண்டதே, இந்த உயிரிழப்புக்கு காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எனினும், பிரேத பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான காரணத்தை தீர்மானிக்க முடியும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.