மூன்று மருந்தகங்களில் திருடிய ஆணொருவரை, பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குறித்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர் 30 அல்லது 40 வயது மதிக்கதக்கவர் எனவும், கனமான சேட் மற்றும் முழு தாடியுடனும், பேஸ் போல் வீரர் அணியும் தொப்பியொன்றையும் அணிந்திருந்தாக பொலிஸார் விபரித்துள்ளனர்.
இவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார், இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள், உடனடியாக அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கமிஷனர்கள் வீதி மேற்கு, சவுத்டேல் வீதி கிழக்கு மற்றும் அடிலெய்ட் வீதி வடக்கு ஆகிய பகுதிகளில் உள்ள மருந்தகங்களில் இந்த கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன.
இதில், இரண்டு திருட்டுகள் கடந்த வாரம் நிகழ்ந்ததாகவும், மற்றொன்று மே மாத இறுதியில் நடந்ததாகவும் கூறப்படுகின்றது.
குறித்த மூன்று திருட்டு சம்பவங்களின் போதும், போதையை உருவாக்கும் பொருளையே குறித்த நபர் கோரியதாகவும், மறைத்து வைத்திருக்கும் ஆயுதத்தால் அந்த நபர் மருந்தக ஊழியர்களை அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த மூன்று சம்பவங்களிலும், ஒருபோதும் ஆயுதத்தை காணவில்லை என மருந்தக ஊழியர்கள், பொலிஸாரிடம் சாட்சியமளித்துள்ளனர்.