LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, August 5, 2019

சந்திரயான்-2 விண்கலத்தினால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் வெளியீடு!

சந்திரனில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவதற்காக அனுப்பப்பட்ட  சந்திரயான்-2  விண்கலத்தினால்  எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளன.

குறித்த ஒளிப்படங்களை இஸ்ரோ இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதன்முறையாக வெளியிட்டுள்ளது.

சந்திரயான்-2 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள டு14 கெமராவால் எடுக்கப்பட்ட இந்த ஒளிப்படங்களின்  மூலம்  பூமியை இதுவரை  கண்டிராத  புதிய பரிமாணத்தில் பார்க்க முடிகிறது.

சந்திரனின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் கடந்த 22ஆம் திகதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

பூமியின் சுற்றுவட்டப் பாதையை கடந்து நான்காம் படிநிலைக்கு உயர்த்தப்பட்டு பயணித்துக் கொண்டிருக்கும் சந்திரயான்-2 எதிர்வரும் 20ஆம் திகதி சந்திரனில் தடம் பதிக்கவுள்ளது.

இந்த காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி மூலம் நேரடியாக பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7