
கொள்ளுப்பிட்டி சந்தியில் கூட்டத்தை கலைக்க போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு முன்பாக ஆரம்பமாகியது. பின்னர் நுகேகொட , கிருலப்பனை, தும்முல்ல சந்தி ஊடாக அலரி மாளிகைக்குச் செல்ல முயன்றது.
இதன்போது பொலிஸாரின் பாதுகாப்பு வேலியை தகர்த்து ஆர்ப்பாட்டக் காரர்கள் முன்னேறிச் செல்ல முயற்சித்த போதே ஆர்ப்பாட்டகாரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டனர்.
கல்வி தனியார் மயமாக்கலை நிறுத்துங்கள் – மாணவர்கள் போராட்டத்தால் முடங்கியது கொழும்பு
காலி வீதியின் கொள்ளுபிட்டி முதல் காலி முகத்திடல் வரையான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கல்வி தனியார் மயமாக்கலை நிறுத்துமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்து குறித்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
