
அம்மை நோயிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பெற்றோர்களின் உறுதிப்பாடே நாட்டின் வெற்றிக்கு காரணம் என உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குநர் டொக்டர் பூனம் கேத்ரபால் சிங் தெரிவித்துள்ளார்.
ஒரு சுயாதீனக் குழு இலங்கையை ‘அம்மை நோய் இல்லாத நாடு’ என்று அறிவிப்பதற்கு முன்னர் அதை அகற்றுவதற்கான முயற்சிகளை ஆய்வு செய்தது. அதன்படி குழந்தைகளுக்கான நோய்த்தடுப்புத் திட்டம் தொடர்பாக பல பிரசாரங்களையும் அந் நிறுவனம் மேற்கொண்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தில் பூட்டான், மாலைதீவு மற்றும் திமோர்-லெஸ்டே ஆகிய நாடுகளுக்குப் பின்னர் தட்டம்மை – ரூபெல்லாவை கட்டுப்படுத்திய நான்காவது நாடு இலங்கை என்று உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
