
சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தேவாலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டு உள்ள நினைவுத்தூபியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மலர் தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதி யாழ்ப்பாணம் நவாலி – பேதுரு தேவாலயம் (சென். பீற்றர்ஸ்) மீது இலங்கை விமானப்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 150-ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு, 350 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர்.
இந்தச் சம்பவம் இடம்பெற்று இன்று 24 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. ஆனாலும் அன்றைய கோரத் தாக்குதலின் துயரிலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை.
