
41 வயதுடைய குறித்த நபர் கடந்த மே மாதம் முதலாம் திகதி நிக்கவரெட்டி புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபரிடம் மேற்கொள்ளப்படவுள்ள மேலதிக விசாரணைகளுக்காகவே அவரை பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியும் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவருமான சஹ்ரான் ஹாஷீமுடன் நுவரெலியாவிலுள்ள முகாம் ஒன்றில் பயிற்சி பெற்றவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்ததுடன் பலர் காயமடைந்திருந்தனர்.
இதனையடுத்து நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் தாக்குதலுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
