
மேலும் வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு 11ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும்.
அந்தவகையில் 6 வேட்பாளர்களுக்கு அதிகமாக இருந்தால் மாத்திரமே எதிர்வரும் 18ஆம் திகதி தேர்தல் நடைபெறும்.
இதன்போது போட்டி இல்லாதபட்சத்தில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றவர்களாக தேர்தலை நடத்தும் அதிகாரியால் அறிவிக்கப்படுவார்கள்.
மேலும் மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வுசெய்ய நடைபெறும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.
சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேரும் அரசியல் கட்சிகளை சேர்ந்த 7 பேரும் என 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். சுயேட்சை வேட்பாளர்களை விதிப்படி சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் முன்மொழியாத காரணத்தினால் அவர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் நிலைமை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
