LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, July 29, 2019

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிப்பு – பிரதமர்

புலிகளின் எண்ணிக்கை ஐந்தாண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, புலிகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு உகந்த இடமாக இந்தியா மாறியுள்ளதாக குறிப்பிட்டார்.

சர்வதேச புலிகள் தினம் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் உள்ள புலிகளின் எண்ணிக்கை தொடர்பாக கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு விபரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் வெளியிட்டார். அதன் பின்னர் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டில் 1400ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 2,977 ஆக அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய மோடி, உலகளாவிய ரீதியில் அதிகமாகவும் பாதுகாப்பாகவும் புலிகள் வாழ்வதற்கு உகந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

உலகளாவிய ரீதியில் எதிர்வரும் 2022ஆம் ஆண்டுக்குள் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என 9 ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் தீர்மானிக்கப்பட்டதென்றும் ஆனால், அந்த கால இலக்குக்கு 4 ஆண்டுகள் முன்னதாகவே இதை நாம் சாதித்து விட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் எதிர்காலத்தில் மக்களுக்கு அதிகமான வீடுகளை கட்டுவதுடன், வனவிலங்குகளுக்கான வாழ்விடங்களும் அதிகமாக அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7