
நீதிமன்றத்தால் இறுதி செய்யப்பட்டுள்ள காவிரி இறுதி தீர்ப்பிற்கும் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி விடக்கூடாது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள இந்த சட்டமூலத்தில் நதிநீர் நடுவர் மன்றங்கள் கலக்கப்படும் நதிநீர் தாவாக்கள் புதிதாக உருவாக்கப்பட்டு தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்படும் போன்ற பாதகம்சங்கள் இருப்பதாக ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படாமல் நீண்ட நாள் இழுத்தடிக்கும் வாய்ப்பு திட்டமிட்டு உருவாக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆகவே ஒரே நதிநீர் தீர்ப்பாயம் என்ற போர்வையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையும், அந்த தீர்ப்பின் அடிப்படையில் அமைந்துள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தையும் உருகுலைப்பதற்கு இந்த சட்டமூலத்தை ஒரு கருவியாக மத்திய அரசு பயன்படுத்திவிடக்கூடாது என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
