
விதமாக ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு நீர் கொண்டுவரப்படவுள்ளது.
அந்தவகையில், நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ரயில் மூலம் குடிநீர் கொண்டுவரப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
குடிநீர் பிரச்சினைகள் குறித்து ஆராய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டமொன்று சென்னை தலைமை செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிற மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த திட்டத்திற்காக கடந்த மாதம் 21ஆம் திகதி 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்தத் திட்டத்திற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சரக்கு ரயிலொன்று நேற்று முன்தினம் ஜோலார் பேட்டைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், சோதனை ஓட்டமும் தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் இந்த திட்டம் வரும் 6 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
