
18 இந்தியர்களையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
குறித்த தகவலை அவர் ருவிற்றரில் வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில் பிரித்தானியா கப்பலில் உள்ள இந்தியர்கள் 18 பேரையும் மீட்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் இதுகுறித்து ஈரான் அதிகாரிகளிடம் பேசி வருகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரசீக வளைகுடாவில் ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் சென்றுக் கொண்டிருந்த பிரிட்டன் எண்ணெய் கப்பலை, ஈரான் கடற்படை சிறைபிடித்து வைத்துள்ளது.
இவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்ட 23 பேரில் 18பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
