
இதனை அடுத்து அவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
அவங் கார்ட் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தை நடத்திச்செல்ல அனுமதி வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு ஆயிரத்து 140 கோடி ரூபாய் நட்டத்தை ஏற்படுத்திய விவகாரம் குறித்து சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனையை நடைமுறைப்படுத்துமாறு, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன அறிவுறுத்தல் விடுத்திருந்தார்.
அதற்கமைய அந்த நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட 8 பேரை உடன் கைது செய்யுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது. குறித்த 8 பேரில் விக்ரர் சமரவீரவும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
