
மொரகஹகந்த – களுகங்கை அபிவிருத்தி திட்டத்தை தேசத்திற்கு வழங்குவதற்கு அர்ப்பணிப்பு செய்தவர்களை பாராட்டி இன்று (திங்கட்கிழமை) முற்பகல் மொரகஹகந்த நீர்த்தேக்க வளாகத்தில் இடம்பெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கும் சுயாதீனமானதும் சுதந்திரமானதுமான நாடாக முன்னோக்கி செல்வதற்கும் மகாவலியினால் கிடைத்த பாரிய சக்தியை எவரும் இலகுவாக மறந்துவிட முடியாதென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டின் புதிய நீர்ப்பாசன நாகரீகத்தின் பின்புலத்தை அமைத்த மகாவலி இயக்கத்தின் இறுதி கட்டமான மொரகஹகந்த – களுகங்கை திட்ட கனவை நனவாக்குவதற்கு கிடைத்தமை பற்றி மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி, இந்த திட்டத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தலைமைப் பொறியியலாளர் முதல் கீழ் நிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் தனது கௌரவம் உரித்தானதாகும் என குறிப்பிட்டார்.
