
கண்டித்து வீட்டு உரிமையாளர்கள் நுழைவுவாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குன்றத்தூர், திருமுடிவாக்கம் பகுதியில் பிரபலமான தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. 50க்கும் மேற்பட்ட சலுகைகளுடன் இந்த கட்டிடம் இருக்கும் என கூறி விற்பனை செய்யப்பட்டது
அந்தவகையில் 25 இலட்சம் ரூபாய் தொடங்கி 80 இலட்சம் ரூபாய் வரையிலான அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கி மக்கள் அதில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கட்டுமான நிறுவனம் பராமரிப்பு ஒப்பந்தத்தை கைவிடாமல் தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதால் மாதந்தோறும் கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் திடீரென அடுக்குமாடி குடியிருப்பின் நுழைவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வீட்டின் உரிமையாளர்கள் கூறுகையில், “2014ஆம் ஆண்டு 987 வீடுகள் கட்டப்பட்டு 56 சலுகைகளுடன் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி, நாங்கள் குடியேறியவுடன் கட்டுமான நிறுவனத்தை சேர்ந்தவர்கள்தான் பராமரிப்பு பணிகளை செய்வோம் என ஒப்பந்தம் எடுத்து வந்தனர்.
தற்போது மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள குடியிருப்புவாசிகள் அனைவரும் சேர்ந்து சங்கம் ஆரம்பித்து விட்டோம்.
ஆனாலும் தனியார் கட்டுமான நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இங்கிருந்து செல்லாமல் நாங்கள் தான் பராமரிப்பு பணிகளை செய்வோமென மிரட்டி கையெழுத்து வாங்கி தொடர்ந்து வருகின்றனர். இதனால் மாதந்தோறும் எந்தவித வசதிகளும் இல்லாமல் ரூபாய் 4 ஆயிரம் தொடங்கி 5 ஆயிரம் வரை பராமரிப்பு கட்டணம் வாங்குகின்றனர்.
இவ்விடயம் குறித்து கேட்டபோது, குடிநீர் இணைப்பு, மின்சாரம் ஆகியவற்றை நிறுத்திவிடுகின்றனர். ஆட்களை வைத்து மிரட்டவும் செய்கின்றனர்.
எனவே இதுகுறித்து பலமுறை புகார் அளிக்கப்பட்டதுடன் நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது. ஆனால் பண பலத்தை பயன்படுத்தி இங்கிருந்து செல்லாமல் எங்களை மிரட்டி வருகின்றனர்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் குறித்து, ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பொலிஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
