LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, July 14, 2019

ஆபத்தை எதிர்கொண்டுள்ள தொல்பொருள் வலயமாக்கப்பட்ட முல்லைத்தீவின் வாவெட்டி மலை

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்துடன் தொடர்புடையதும், தமிழர்களின் வரலாற்றை எடுத்தியம்புவதுமான வாவெட்டி மலை ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தொல்பொருள் வலயமாக காணப்படும் இந்த மலையில் பாரிய அளவில் கருங்கல் அகழ்வு இடம்பெற்று வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்துடன் தொடர்புடைய வாவெட்டி மலையில் அமைந்துள்ள வாவெட்டி ஈஸ்வரர் ஆலயத்தில் நேற்று (சனிக்கிழமை) மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டனர்.

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டைத் திருவிழாவின் போது, ஆலயத்திலிருந்து வாவெட்டிமலை சிவன் ஆலயத்துக்குச் சென்று அங்கு விசேட பூசைகள் இடம்பெறுவது வழக்கம்.

போரின் பின்னர், கடந்த 2017ஆம் ஆண்டுமுதல் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டைத் திருவிழா நடைபெறும் நாளில் மக்கள் வாவெட்டி மலைக்குச் சென்று அங்கு வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் நேற்றும் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டைத் திருவிழா நடைபெற்ற நிலையில் வாவெட்டி மலையில் வழிபாடுகள் இடம்பெற்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மிக உயர்ந்த மலையாக இது காணப்படுகின்றது. இந்த மலையில் சுமார் 1800ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்திலிருந்து வன்னியை ஆட்சி செய்த மன்னர்களால் ஆலயம் உருவாக்கப்பட்டு வழிபட்டு வந்தமைக்கான சான்றுகள் இன்றும் காணப்படுகின்றன. மலையின் உச்சியில் ஆலயம் இருந்தமைக்கான கற்தூண்கள், மலையின் உச்சியில் கொடி நாட்டப்பட்டமைக்கான கொடிப்பீடம் ஆகியன இன்றும் காணப்படுகின்றன.

இந்நிலையில் தொல்பொருள் திணைக்களத்தால் தொல்பொருள் அடையாளச் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இந்த மலையில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கருங்கல் அகழ்வுப் பணி மிகத் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றது.

நாளாந்தம் பல நூற்றுக்கணக்கான டிப்பர் வாகனங்கள் மூலம் கருங்கல் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது.

தென்பகுதியைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் அனுமதிகளைப் பெற்று இங்கே கல்லுடைக்கும் ஆலைகளை அமைத்து பெருமெடுப்பில் கல் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனால் தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மலை அழிவடைந்து போகும் அபாயம் தோன்றியுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர் .

வழமைபோன்று தமிழ் மக்களுடைய இடங்களை கையகப்படுத்துகின்ற தொல்பொருள் திணைக்களத்தின் ஆளுகையில் இருக்கும் இந்த மலையில் தொல்பொருள் இடங்கள் அழிவடையும் வகையில் எவ்வாறு அகழ்வு பணியை மேற்கொள்ள அனுமதி வழங்க முடியும் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் .

ஈழத் தமிழர் வரலாற்றுடன் தொடர்புடைய இந்த மலையை தொல்பொருள் திணைக்களம் பாதுக்காகவேண்டும் எனவும் இதனை அண்டிய பகுதியில் இடம்பெறும் கருங்கல் அகழ்வு நடவடிக்கையை அவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.









 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7