LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, July 23, 2019

யாழில் மதம் பரப்பும் நோக்குடன் கூட்டம் நடத்தச் சென்றவர்கள் மக்களால் வெளியேற்றப்பட்டனர்

பொன்னாலை மற்றும் கல்விளான் கிராமங்களில் மதம் பரப்பும் நோக்கத்துடன் சுவிஷேசக் கூட்டம் நடத்துவதற்கு முற்பட்ட கிறிஸ்தவ சபை ஒன்றின் உறுப்பினர்கள் மக்களால் வெளியேற்றப்பட்டனர்.

இச்சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.

பொன்னாலையில், கிறிஸ்தவ மக்கள் எவரும் வசிக்காத இடத்தில், தனியார் காணி ஒன்றில் இசை நிகழ்வுடன் கூடிய கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வெளியிடத்தில் இருந்து பேருந்து ஒன்றிலும் மோட்டார் சைக்கிள்களிலும் நூற்றுக்கணக்கானோர் கொண்டுவரப்பட்டு இறக்கப்பட்டனர்.

இதனை அவதானித்து அங்கு சென்ற அவ்வூர் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இருவர், யார் அனுமதி வழங்கியது என அப்பகுதி மக்களைக் கேட்டனர். அவர்கள் தாங்களாகவே வந்து கூட்டம் நடத்துகின்றார்கள் என்றனர்.

எதற்காகக் கூட்டம் நடத்துகிறீர்கள் என வந்தவர்களிடம் கேட்டபோது, நோய், பிணிகளில் இருந்து மக்களை விடுவிப்பதற்கான நிகழ்வு எனப் பதிலளித்தனர்.

அப்படியாயின் வைத்தியசாலைகளை மூடிவிட்டு நீங்களே ஜெபியுங்கள் என ஆத்திரத்துடன் கூறிய குறித்த இளைஞர்கள் உடனடியாக இந்த இடத்தில் இருந்து வெளியேறுங்கள் என அவர்களை எச்சரித்தனர்.

“பொன்னாலை பூர்வீகமாக சைவப் பூமி. இங்கு மதம் பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டால் விளைவுகள் விபரீதமாக முடியும் என ஊரவர்களுடன் இணைந்து அவர்களைக் கடுமையாக எச்சரித்து வெளியேற்றினர்.

இதையடுத்து, பொன்னாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர்கள், அடுத்த கிராமமான கல்விளானில் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர்.

இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சனசமூக நிலையத்தின் பிரதிநிதிகள் அங்கு சென்று அவர்களை பலவந்தமாக வெளியேற்றியதுடன், இவ்வாறு மதம் பரப்பும் நோக்கத்துடன் எந்தக் கிறிஸ்தவ சபையும் ஊர்ப் பகுதிகளுக்குள் நுழைந்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என ஊர் இளைஞர்கள் எச்சரித்துள்ளனர்.






 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7