கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மக்கள் அகப்பட்ட நிலையில் தீவர மீட்புப் பணிகளைத் தொடர்ந்து அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மும்பையின், பந்த்ரா பகுதியில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டடம் ஒன்றிலேயே இன்று (திங்கட்கிழமை) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு 14 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டு தீயணைக்கும் பணியுடன் மீட்புப் பணிகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, கட்டடத்தின் மேல்தளத்தில் பலர் தஞ்சம் புகுந்திருந்த நிலையில், கட்டடத்தில் சிக்கியிருந்த 84 பேரும் தீயணைப்பு வீரர்களால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த தீ விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.