
மேலும், சோபா உடன்படிக்கையை நாடாளுமன்றில் முன்வைக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “சோபா உடன்படிக்கையை நாடாளுமன்றில் முன்வைக்க விரும்புகிறேன். இந்த உடன்படிக்கையானது 1996ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒரு ஒப்பந்தமல்ல.
இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகமும் எமது வெளிநாட்டு அமைச்சும் செய்துகொண்ட ஒப்பந்தத்தையே, எதிரணியினர் ஒரு பூதமாக சித்தரிக்க முயற்சித்து வருகிறார்கள். இங்கு புதிய ஒப்பந்தங்கள் எதுவும் செய்துகொள்ளப்படவில்லை.
பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக மட்டுமே சோபா உடன்படிக்கையில் செய்துகொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தவிர வேறு எந்த ஒப்பந்தமும் செய்துகொள்ளப்படவில்லை என்பதை நான் இங்கு உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.
இது தொடர்பாக நான் பாதுகாப்பு அமைச்சிடமும் வினவியிருந்தேன். அவர்களும் வேறு ஒரு ஒப்பந்தத்திலும் தாங்கள் கைச்சாத்திடவில்லை என உறுதியாகக் கூறினார்கள். மேலும், பேச்சுவார்த்தை மட்டுமே மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டது. ஆனால், அது சாத்தியப்படுமா சாத்தியப்படாதா என்பதை இப்போது கூறமுடியாது.
எவ்வாறாயினும், நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் நாம் செய்துகொள்ளப்போவதில்லை என்பதை இந்த சபையில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
