
வவுனியா இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 12ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு வவுனியா கந்தசாமி கோயில் முன்றலில் குறித்த கண்டனப் பேரணி ஆரம்பமாகவுள்ளது.
இப்பேரணியானது வவுனியா மாவட்ட செயலகத்தினை சென்றடைந்து அங்கு மகஜரொன்றும் கையளிக்கப்படவுள்ளது.
திருக்கேதீஸ்வர ஆலயத்தினுடைய தோரண நுழைவாயில் அமைப்பதற்கான அனுமதியானது பல்வேறு இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் மன்னார் பிரதேச சபையினால் அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் கடிதம் வழங்கப்பட்டு ஒரு சில நாட்களில் குறித்த அனுமதி மீண்டும் இரத்துச் செய்யப்படுவதாக மன்னார் பிரதேச சபையினுடைய தலைவரின் ஒப்பத்துடன் கடிதம் அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இதற்கு மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை கண்டனம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
