
அத்துடன், மட்டக்களப்பு ஷரீஆ பல்கலைக்கழகம் மனிதப் படுகொலைகளை உருவாக்கும் தொழிற்சாலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவந்திருந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் இன்று (புதன்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், “அனைத்து முஸ்லிம் அடிப்படைவாதிகளையும் ஒன்று திரட்டுவதற்காக அமைக்கப்பட்டதுதான் இந்த மட்டக்களப்பு பல்கலைக்கழகம். இது இலங்கைக்கு மாத்திரமல்ல, முழு ஆசியாவுக்கும் அச்சுறுத்தலானதாகும். இந்த முஸ்லிம் பயங்கரவாதம் உலகம் பூராகவும் இருந்து வருகின்றது” என்றார்.
இதன்போது ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவிக்கையில், இஸ்லாமிய பயங்கரவாதம் இல்லை. ஐ.எஸ். முஸ்லிம் அமைப்பு அல்ல என தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த தேரர், தலிபான், அல்-குவைதா போன்ற பல பயங்கரவாத அமைப்புக்கள் இருக்கின்றன எனவும் அவை அனைத்தும் முஸ்லிம் என்ற பெயரிலேயே உள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
