
கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்திற்கு குறித்த பொதியை பெற்றுக் கொள்வதற்காக இன்று (புதன்கிழமை) வருகை தந்தவரை சுங்கத் திணைக்களத்தினர் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது, சந்தேகநபரின் முகவரிக்கு அனுப்பப்பட்ட பொதியினுள் இருந்து சுமார் 14.7 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2,952 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
