LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, July 9, 2019

புனித மிக்கல் கல்லூரி பாடசாலை அணி இவ்வாண்டுக்கான சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

கடினபந்து கிரிக்கட்சமரில் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி பாடசாலை அணி இவ்வாண்டுக்கான சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.
மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி தேசிய பாடசாலைஅணிக்கும் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி தேசிய பாடசாலைஅணிக்குமிடையில்முதல் முறையாக நடைபெற்ற  5௦ ஓவர் கொண்ட  சிநேகபூர்வமான கடினபந்து கிரிக்கட்சமரில் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி தேசிய பாடசாலை அணி இவ்வாண்டுக்கான சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.
நாணய சுழற்சியில் முதலில் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி தேசிய பாடசாலைஅணிமுதலில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்து 40 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து  102 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது .பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி தேசிய பாடசாலைஅணி  ஆறு விக்கட்டுகள் இழப்புக்கு 30 ஓவர்களில் 103ஓட்டங்களை பெற்று ௦ 5 விக்கட்டுகளால்     இவ்வாண்டுக்கான ஜோய்ஸ் மிக் கிரிக்கட்சமர் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.  
இப்போட்டி நிகழ்வுகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் ,மட்டக்களப்பு மறைமாநில ஆயர் கலாநிதி ஜோசெப் பொன்னை யா ஆகியோர் சிறப்பு  அதிதியாகக்கலந்து கொண்டுஆரம்பித்து வைத்தார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி தேசிய பாடசாலைஅணியின் எம்.பிரந்தாவணன்தெரிவானார்  3 விக்கட்டுகளை இவர் வீழ்த்தியதுடன் 27 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.சிறந்த களத்தடுப்பு வீரராக திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி தேசிய பாடசாலைஅணியின்என்,எஸ்.ஜதுர்சன்,மற்றும் சிறந்த பந்து வீச்சாளராக மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி தேசிய பாடசாலைஅணி  எஸ்.துஜிதரன் ,சிறந்த துடுப்பாட்ட வீரராக மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி தேசிய பாடசாலைஅணி  ஏ.பிரலாளன் ஆகியோரும் தெரிவாகினர்.
இதன் பரிசளிப்பு விழாவில் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் ஏகே.மன்சூர் ஹட்ஸ் வலையமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரிதிருக்குமார் நடராசா பொதுமுகாமையாளர் மனோஜ், மோசஸ்மாவட்ட விளையாட்டு அதிகாரி வீ.ஈஸ்பரன், கோட்டமுனை விளையாட்டு கிராம தலைவர் இ.சிவநாதன் யேசுசபை உதவி மேலாளர் அருட்சகோதரர்  போல் சற்குணநாயகம் ஆகியோரும்சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டு பரிசில்களையும் வெற்றிக்கிண்ணங்களையும் வழங்கிவைத்தனர் .















 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7