
இந்த ரயில் திட்டத்திற்கு “Trans-Asean Line” என்று பெயரிடப்பட்டுள்ளது. குறித்த செயற்றிட்டத்திற்காக 2.07 ரில்லியன் தாய் பாத் அல்லது 67.3 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தாய்லாந்துடன் மற்ற நாடுகளை ரயில் பாதையின் மூலம் இணைப்பதுடன் பெய்ஜிங் வரை பாதைகளை அமைப்பதே திட்டத்தின் நோக்கமாகும். அதிவேக ரயில் திட்டத்தின் அடிப்படையில் 4 ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளன.
தாய்லாந்தின் சியாங் மாய், பாங் சூ, கம்போடியா, மலேசியா, லாவோஸ், மற்றும் சீனாவின் பெய்ஜிங் ஆகிய இடங்களை ரயில் பாதை இணைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3,193 கிலோமீட்டர் நீளங்கொண்ட ரயில் கட்டமைப்பு தாய்லந்தின் நவீன போக்குவரத்துத் திட்டத்தையொட்டி எடுக்கப்படும் முக்கிய தீர்மானம் என்று அந்த நாட்டின் துணைப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.
ரயில் பாதைகள் பயணத்தைச் சுலபமாக்கி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.
ரயில் திட்டத்தின் கீழ் முதல் பாதை அமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில். 2023 ஆம் ஆண்டில் திட்டம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
