
செய்ய விஜய் மல்லையாவுக்கு லண்டன் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவுக்கு நாடு கடத்தக் கூடாது என லண்டன் நீதிமன்றில் விஜய் மல்லையா தொடர்ந்துள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளிடம் இருந்து 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் அவர் இங்கிலாந்துக்கு தப்பி ஓடினார்.
விஜய் மல்லையாவை இங்கிலாந்தில் இருந்து அந்நாட்டு அரசின் உதவியோடு இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு வெஸ்ட் மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது.
மத்திய அரசாங்கம் முன்வைத்த ஆவணங்கள் அடிப்படையில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து அரசு கடந்த பெப்ரவரி மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஜய் மல்லையா லண்டன் நீதிமன்ரில் எழுத்துபூர்வ மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை ஏப்ரல் 5 ஆம் திகதி நீதிபதி வில்லியம் டேவிஸ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது அதனை தள்ளுபடி செய்தார். இதையடுத்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
