
போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கம்பளையிலிருந்து மரியாவத்த ஊடாக உடகமவுக்கு செல்லும் பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (புதன்கிழமை) நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில், பிரதேச மக்கள், சர்வமதத் தலைவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இதற்கு முன்னரும் வீதியை இடைமறித்து மூன்று தடவைகள் மக்கள் போராடினர். எனினும், கோரிக்கை நிறைவேற்றப்படாததன் காரணமாகவே மீண்டும் வீதியில் இறங்கினர்.
தெம்பிலிகல, வல்லாகொட உட்பட மேலும் சில கிராமங்களுக்கு இந்த வீதி ஊடாகவே பயணிக்கவேண்டியுள்ளது. எனினும், அது பேரவலமாக காட்சி தருகின்றது. பாதையை புனரமைத்துதருமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் இன்னும் தீர்வு கிட்டவில்லை. தீர்வு கிடைக்கும் வரையில் தாம் ஓய மாட்டோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
