LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, July 3, 2019

சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தால் தொழிலை இழந்த கனேடிய கலைஞர்!

இரண்டு மரணங்கள் – ஒரு ஔிப்படம் கடந்த
வாரம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எல் சால்வடோர் நாட்டை சேர்ந்த ஒஸ்கர் அல்பெர்டோ மற்றும் அவரின் மகளும் ஆற்றங்கரையில் இறந்து கரையொதுங்கிய ஔிப்படமே அது.

இந்தப் ஔிப்படத்தை எடுத்தது ஜூலியா லி டக் என்ற பத்திரிகையாளராவார். அமெரிக்காவில் குடியேறுவதற்கு ஓஸ்கர் அல்பெர்டோ விண்ணப்பித்திருந்தார்.

அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், எல் சால்டோரில் இருந்து மெக்ஸிகோவுக்கு சென்ற அவர் சர்வதேச எல்லையில் காத்திருந்தார்.

அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கு பாய்ந்து செல்லும் கிராண்ட் ஆற்றைத் தன் மனைவி மற்றும் மகளுடன் கடந்துவிடலாம் என முடிவு செய்துள்ளார்.

ஆற்றில் சீறிப்பாய்ந்த தண்ணீர் இவரது முயற்சிக்குத் தடையாக இருந்தது. ஆற்று நீரில் ஒஸ்கர் அல்பெர்டோ சிக்கியதைக் கண்டதும் அவரின் மனைவி தனது முயற்சியைக் கைவிட்டுவிட்டு கரைக்குத் திரும்பிவிட்டார். ஆனால், ஒஸ்கர் அல்பெர்டோவும் அவரின் மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.



இந்தப் ஔிப்படம் அண்மையில் வைரலானது அமெரிக்காவுக்குள் தஞ்சமடையும் அகதிகள் எவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்று உலகளவில் பேசுபொருளானது.

இதுதொடர்பாகக் கனடாவைச் சேர்ந்த கேலிச்சித்திர கலைஞர் மைக்கல் டி அட்டர் (michael de addar” ஜனாதிபதி ட்ரம்பை கண்டிக்கும் வகையில் கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்திருந்தார்.

கோல்ப் மைதானத்தில் இருக்கும் ட்ரம்ப் ஆற்றில் இறந்த ஆஸ்கர் அல்பெர்டோ மற்றும் அவரின் மகளின் சடலத்தைப் பார்த்து, “நான் விளையாடுவதைப் பார்த்து நீங்கள் கவலைப்படுகிறீர்களா?” என்று கேட்பதுபோல் வரைந்திருந்தார்.

இந்த கேலிச் சித்திரம் வைரலானது. அவர் பணிபுரிந்த நிறுவனம் அவரைப் பணியிலிருந்து நீக்கியுள்ளது.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள Michael de addar `திடீரென வேலையை இழப்பது அவ்வளவு முக்கியமானதாகத் தெரியவில்லை. நான் கேலிச்சித்திரங்கள் ஊடாக சண்டையில் இறங்கினேன். நான் என் பணியைத்தான் செய்கிறேன். என் கேலிச்சித்திரங்களுக்காகப் போராடுகிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7