
இயக்கிய கார்த்திக் ராஜுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கண்ணாடி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் ‘மாநகரம்’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ திரைப்படங்களில் நடித்த சந்தீப் கிஷான் கதாநாயகனாக நடித்துள்ளார்.
நகைச்சுவை, காதல், திகில் எனும் கதையம்சத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இம் மாதம் 12ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இத்திரைப்படத்தில் அன்யா சிங், கருணாகரன், பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தமன் இசையமைத்துள்ள இந்த படத்தை V.ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் விஜி சுப்ரமணியன் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் வெளியாகவுள்ளது.
