
நிர்மாணிக்கப்படும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில், ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
குறித்த பல்கலைக்கழகத்தை மூட வேண்டும் அல்லது அரசாங்கத்தின் கீழ் அதனைக் கொண்டு வரவேண்டுமென பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், குறித்த பல்கலைக்கழகத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று (திங்கட்கிழமை) முறைப்பாடொன்றை அளித்துள்ளார்.
அந்தவகையில் முறைப்பாடு குறித்து அத்துரலிய ரத்ன தேரர் மேலும் கூறியுள்ளதாவது,
“இன்று நாம் பல்வேறு நிறுவனங்களில் இருந்தும் மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படும் பல்கலைக்கழகம் தொடர்பில் பல தகவல்களை பெற்றுள்ளோம்.
இது ஹிஸ்புல்லா மற்றும் அவரது குடும்பத்துக்கு சொந்தமான ஒரு நிறுவனமாகும்.
அந்தவகையில், இவ்விடயம் குறித்து பி.ஓ.ஐ. மற்றும் உயர் கல்வி நிறுவனத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் ஊடாக எமக்கு பல தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்தத் தகவல்களையே நாம் இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவிடம் கையளித்தோம்” என அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
