
அரசாங்கத்தின் சகல அபிவிருத்திப் பணிகளும் நிறைவுபெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) அலரிமாளிகையில் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் கடந்த நான்கு வருடங்களில் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பல்வேறு சவால்களை சந்தித்திருந்தது.
அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்கள் எதுவாக இருந்தாலும் அரசாங்கத்தின் அபிவிருத்தி பணிகள் எதுவும் இடைநிறுத்தப்படவில்லை.
2018 ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் வெற்றிக்கு பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பனர்களை மாத்திரம் கொண்ட அமைச்சரவையே உருவாகியது.
இதனை அடுத்து ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பதிப்பில் இருந்து நாட்டி மீட்டெடுத்து அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் நிறுத்தாமல் மிகக் குறுகிய காலத்தில் அவற்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் அரசாங்கத்தின் சகல அபிவிருத்திப் பணிகளும் நிறைவுக்கு வரும் அதற்கான ஆலோசனைகளும் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.” என பிரதமர் ரணில் கூறினார்.
