
பிரித்தானிய அரசாங்கம் தற்போது அந்தமுடிவின் அனுமானத்திலேயே செயல்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும் தனது அணி இன்னும் பிரஸ்ஸல்ஸுடன் ஒரு உடன்படிக்கைக்கு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் எனினும் இதுவரையில் எந்தவொரு ஒப்பந்தத்துக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பியத் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவிதப் பயனும் ஏற்படவில்லை என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஸ்கொட்லாந்து விஜயத்தின்போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தமக்கு விருப்பமில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் தெரிவித்துள்ளன.
ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் (no-deal) பற்றிப் பேசப்படுவதால் அமெரிக்க டொலர் மற்றும் யூரோவிற்கு எதிராக ஸ்ரேர்லிங் பவுண்ஸின் நாணயமதிப்பு குறைந்துள்ளது.
